Wednesday, 16 December 2015

2013 தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 90+ தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு

2013  தமிழ் நாடு தகுதி தேர்வு  PAPER – I & PAPER II  90+ தேர்ச்சி பெற்ற அனைத்து
ஆசிரியர்களின் கவனத்திற்கு 

                          நமது  ஒரு நாள் வாழ்க்கை

இந்த உலகத்திற்கே விடியல் வருவதுபோல்தான் நமக்கும் விடிகிறது . விடியலுடன் பயமும் நம் மனதை அப்பி கொள்கிறது  இருட்டாய். ஏன்?... பார்க்கும் ஒவ்வொரு பழகிய முகத்தையும் நேருக்கு நேர் பார்த்தாக வேண்டுமே… கடமைக்கு சிரித்தாக வேண்டுமே…  இப்படி நாம் எதிர் கொள்ளும் கேள்விகளெல்லாம் ஈட்டியாய் பாயும். அவமானம் பீறிடும் 
" அப்புறம் இப்போ என்ன பண்றீங்க?
 “  எங்க வேலை  பாக்கறீங்க?  “
இந்த இரண்டு கேள்விகளும் கடந்த இரண்டு வருடங்களாக கடன் கொடுத்தவன் போல் பின் தொடர்கிறது .
காலை 8 மணி முதல் 9 மணி வரை வேலைக்கு செல்லும் பெண்களை கண்டால் மனம் தாழ்வு  மனப்பான்மை கொள்கிறது…. பொறாமையோகோபமோ அல்ல. நம் அங்கீகாரம்  மறுக்கப்பட்டதை எண்ணி அரற்றுகிறது உள்ளம்….
ஒருபுறம் சத்தமிட்டு அழ முடியாத சூழல்!!   
அழகூடாது என்ற வைராக்கியம்  மறுபுறம் !!
இப்படி இதயமும்ரத்த ஓட்டமும் மாறிமாறி செயல்பட்டு உடல் நலமும் கேட்டு போனது...
2 மணி நேரம் இவைகளை மறக்க போராட வேண்டும்.  மீண்டும் மாலை மணி காலையில் அனுபவித்த அதே வேதனை. கொஞ்சம் இருண்ட பின்பு வெளி  உலக அன்றாட பணிகளை முடிக்க வேண்டும். இப்படி ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை,  இரண்டு வருடங்கள் ஆண்,  பெண் என்ற பாகுபாடு இன்றி சரிசமமாக அனுபவித்துள்ளோம் . நம்மில் யாரும் இதில் விதிவிலக்கல்ல .சில சகோதரசகோதரிகள் பேசும்போது கூறும் வேதனைகள்எதிர்கால பயங்கள் நம்மை உலுக்கிவிடும் .
ஒரு அரசாங்க பணி கிடைக்காமல் போனால் ஒரு தனிமனித  வாழ்வு இவ்வளவு பாதிக்க படுமா ?  என்ற  கேள்விக்கு விடை நாமே.

சமுதாயத்தில் கல்வி எவ்வளவு மென்மையாக்கும் என்பதற்கு இந்த TET  தேர்வே உதாரணம் .அதேபோல் விசித்திரமான ஒன்றும்  நம்பியாக வேண்டும். இதே TET  தேர்வால்  சமுதாயத்தின் கேள்விகுறியாய் நாம் இருக்கிறோம் .இது தலைகீழ் விமர்சனம் அல்ல. உண்மை . அதற்கு உதாரணம் நாமே…

நாம் செய்த தவறு என்னஎப்போது யாரால் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண்போம் .
எதிர்மறையான வினாக்கள் அல்ல இவையெல்லாம் ஐயம் இல்லாத வினாக்கள் .
வேலை கிடைக்குமா?
தலைமுறை சிறக்குமா?
சிறந்த ஆசிரியர்களாக வலம் வருவோமா ?
இப்படி இன்னும் ....
                                                                                                                                   தொடரும் .
                                                                                                                         மு .ஜெயகவிதாபாரதி